சென்னை: சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு பிரிவுகளில் புறநகர் ரெயில் சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் ரெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் புறநகர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரெயில் சேவையை மாற்றம் செய்து ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு பிரிவுகளில் புறநகர் ரெயில் சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவித்துள்ளது.