கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஒன்றியங்களில் ரூ.50 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் திறப்பு விழா நடந்தது. 2.16 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட பணிகள் ரூ. 13 லட்சத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கே.எம்.சரயு, எம்எல்ஏ மதியழகன் முன்னிலை வகித்தனர்.
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை துவக்கி வைத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி, அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.8,000 கோடி செலவில் 20,000 சாலைகள் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 3,827 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் 2 லட்சம் தனி வீடுகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
13,455 மாணவர்களுக்கு ரூ.6.48 கோடி மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் (பொ) பெரியசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) முனிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.