ஊட்டி: ஆண்டுதோறும் ஆயுதபூஜை மற்றும் பொங்கல் பண்டிகைக்கு சமவெளியில் இருந்து கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட அனைத்து பூஜை பொருட்களும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
வழக்கமாக இந்த பொருட்கள் திருவிழா நாட்களுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும். சமவெளியில் இருந்து கொண்டு வரப்படுவதால், சற்று அதிக விலைக்கு விற்கப்படுவது வழக்கம்.
ஆயுதபூஜை நாளை 11-ம் தேதி கொண்டாடப்படுவதால், நேற்று ஊட்டி மார்க்கெட்டுக்கு கரும்பு, பூஜை பூ, மஞ்சள், வாழைப்பழம் போன்றவை கொண்டு வரப்பட்டன.
நேற்று முதல் கரும்பு விற்பனை துவங்கியுள்ளது. ஊட்டியில் ஒரு கரும்பு ரூ.50 முதல் ரூ.70 வரை விற்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.50-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில், இம்முறை ரூ.20-க்கு கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், இம்முறை மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருவதால், பூக்கள் குறைவாக வந்துள்ளதால், மாலைகள் மற்றும் பூக்களின் விலை சற்று உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊட்டி, குன்னூர் போன்ற இடங்களில் பூஜைப் பொருட்களை வாங்க மக்கள் இன்று குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.