2 குழந்தைக்கு மேல் பெற்றால் தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும்!!- சந்திரபாபு நாயுடு அறிவிப்பால் ஆந்திராவில் சர்ச்சை.
இந்தியாவின் சராசரி மக்கள்தொகை வளர்ச்சி 1950 களில் 6.2 சதவீதத்தில் இருந்து 2021 இல் 2.1 ஆக குறைந்துள்ளது. ஆனால், ஆந்திராவில் இந்த எண்ணிக்கை 1.6 சதவீதமாக குறைந்துவிட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் இளைய தலைமுறையினர் இடம்பெயர்ந்து வருகின்றனர். 2047க்குப் பிறகு, ஆந்திராவில் இளைஞர்களை விட வயதானவர்கள் அதிகமாக இருப்பார்கள்.
இதனால் அதிக குழந்தைகளைப் பெறுவதும் உங்கள் பொறுப்பு. அதிக குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்க நாங்கள் யோசித்து வருகிறோம், மேலும் குழந்தைகளைப் பெற தம்பதிகளை ஊக்குவிக்கிறோம். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற முந்தைய சட்டத்தை ரத்து செய்துள்ளோம். 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வருவோம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.