சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணியின் போது, அந்த வழித்தடத்தில் கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை (ஆக., 3ம் தேதி) முதல், 14ம் தேதி வரை, காலை, 10.30 மணி முதல், 2.30 மணி வரை, பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இரவு 10 மணி முதல் 11.59 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையிலும், சென்னை கடற்கரை ரயில்கள் செங்கல்பட்டில் இருந்து கூடுவாஞ்சேரி வரையிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே அவ்வழியாக செல்லும் பயணிகளின் நலன் கருதி, நாளை முதல் 14ம் தேதி வரை, பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகள், பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகள் என மொத்தம் 70 பேருந்துகள் நாளை முதல் 14ஆம் தேதி வரை இயக்கப்படும். , மற்றும் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து தியாகராய நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள்.
தற்காலிக நிறுத்தம்: மேலும், காவல் துறையின் கோரிக்கையை ஏற்று, தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க முக்கிய பேருந்து நிலையங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.