புதுடெல்லி: மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று கூறியதாவது:- வரும் மத்திய பட்ஜெட்டில், ஆண்டுக்கு, 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு, வருமான வரியை குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.
மேலும், வரிச்சுமையில் உள்ள நடுத்தர மக்களுக்கு இது பெரும் நிவாரணமாக இருக்கும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த வரி குறைப்பு திட்டம் அமலுக்கு வந்தால், லட்சக்கணக்கான வரி செலுத்துவோருக்கு பெரும் பயன் கிடைக்கும். குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிக வாழ்க்கைச் செலவுகளை எதிர்கொள்பவர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.