தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு நேற்று வந்த முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள பழமையான காசி விஸ்வநாதர் கோவிலில், 2.5 அடி உயரமுள்ள வீணாதர தட்சிணாமூர்த்தி சிலை, 1997ல் திருடப்பட்டது.
இந்த சிலை தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் ஏலம் மூலம் தனியாரிடம் சென்று விடும். தனி நபர் கையில் கிடைத்தால் சிலையை மறைத்து விடுவார்கள். எனவே தமிழக அரசு மற்றும் சிலை கடத்தல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிலையை மீட்க வேண்டும்.
மேலும் இக்கோயிலின் கருவறையின் பின்புற சுவரில் 4 அடி உயரத்தில் தேவகோஷ்டம் எனப்படும் லிங்கோத்பவரின் சிற்பம் உள்ளது. இந்த அமைப்பு இருந்தால் மிகவும் பழமையான கோவில். இதை அறநிலையத்துறை அதிகாரிகள் ஆயில் பெயின்ட் அடித்து மூடி மறைத்தனர். அவர் கூறியது இதுதான்.