ராயக்கோட்டை: ராயக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய சாகுபடிக்கு சாதகமான சூழல் நிலவுவதால், மலர் செடிகள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, ராயக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள தொட்டதிம்மனஅள்ளி, உல்லட்டி, நெல்லூர் ஆகிய கிராமங்களில் அஸ்தல் பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சொட்டு நீர் பாசனத்தில் பயிரிடப்படும் ஆஸ்டல் பூக்கள் விளைச்சல் காரணமாக சாகுபடி செலவு குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பூ நன்கு வளர்ந்து பூத்தவுடன் பறித்து சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு கிலோ ரூ.80-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.