திருப்பூர்: தீபாவளி பண்டிகையை ஒட்டி திருப்பூர் ரயில் நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். மாநிலங்கள் தாண்டிய ரயில் பயணத்திற்கு முன்பதிவில்லா பெட்டிகளில் முண்டியடித்து ஏறி தங்களுக்கான இடங்களை பிடித்தனர்
ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான ரயில் பயணம் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். திருப்பூர் ரயில் நிலையத்தில் அதிகளவில் கூட்டம் கூடியுள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.