சென்னை: சென்னையில் மழை பெய்து வருவதால் தங்களின் ‘கார்களை மேம்பாலங்களில் பார்க் செய்துள்ளனர் உரிமையாளர்கள்.
சென்னையில் அதிகாலை முதலே மழை பெய்துவருவதால், ராயபுரம் NRT மேம்பாலத்தின் இருபுறமும் கார்கள், தனியார் பேருந்துகள் என 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.
இதேபோல் வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை மேம்பாலங்களிலும், இருபுறமும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.