சென்னை: ஒட்டன்சத்திரம் அருகே பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் இருந்து தொப்பம்பட்டியில் கல்லுாரி கட்டப்பட்டு, ரூ.20 கோடிக்கு மேல் செலவில் நிரந்தர பள்ளி கட்டுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பழனி கோயில் நிதியில் இருந்து 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சௌந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதித்துறை மற்றும் அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வக்கீல் அருண் நடராஜனிடம், “அரசு பணத்தில் கல்லுாரி கட்டப்படுவதால், ஆட்சேபனை இல்லை. ஆனால், கோவில் நிதியில் இருந்து எப்படி இவ்வளவு பெரிய தொகை எடுக்கப்படுகிறது?” என, நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு அவர், “தற்போது டெண்டர் மட்டுமே கோரப்பட்டுள்ளது” என்றார். அப்போது, மனுதாரர் டி.ஆர். ரமேஷ் கூறுகையில், தொப்பம்பட்டிக்கு பதிலாக, கல்லுாரியை வேறு இடத்துக்கு மாற்ற, அறநிலையத்துறை செயலாளருக்கு அதிகாரம் இல்லை.
உயர்கல்வித்துறை செயலர் தான் உத்தரவு பிறப்பிக்க முடியும். மாற்றும் புதிய இடத்தில் ஏற்கனவே அடிக்கல் நாட்டி விட்டனர். தண்ணீர் பந்தல் தர்மத்துக்கு கிடைத்த நிலத்தில், பழனி உபகோயில் என்ற பெயரில் புதிய கல்லூரி கட்டுகின்றனர். இது சட்டத்துக்கு எதிரானது. அரசு வக்கீல் அருண் நடராஜன் கூறுகையில், “கல்லூரி துவங்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021-ல் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி பழனி தொப்பம்பட்டி உட்பட 4 இடங்களில் கல்லுாரிகள் துவங்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
அவற்றுக்கான நிரந்தர ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பணிக்கு தடை இருக்காது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் தற்போதைக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்று கூறி விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.