சென்னை: பகுதி நேர ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்ய வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க, 2012-ம் ஆண்டு முதல், பகுதி நேர ஆசிரியர்கள், மொத்த தொகையில் நியமிக்கப்பட்டனர்.
அதன்படி, தற்போது, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 நாட்கள் பள்ளிகளில் பாடம் நடத்துகின்றனர். அதற்கு மாதச் சம்பளமாக ரூ.10,000 வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பணி நிரந்தரம் செய்யக் கோரி, பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டு திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முருகதாஸ் கூறுகையில், “13 ஆண்டுகளாக எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். ஆனால், பலனில்லை. பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. இதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை, எனவே தமிழக அரசுக்கு நினைவூட்டி பணி நிரந்தரம் செய்ய முன்வர வேண்டும் போராட்டம் தொடரும்,” என்றார்.