சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.
தேவைக்கு ஏற்ற வகையில் கூடுதல் ரயில்கள் இல்லாததால், அலுவலக நேரத்தில் நெரிசலில் சிக்கி பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இது தவிர, குறிப்பிட்ட நேரத்தில் மின்சார விரைவு ரயில்கள் போதிய எண்ணிக்கையில் இயக்கப்படாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே கூடுதல் மின்சார விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியதாவது:-
தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள் பல மடங்கு அதிகரித்துவிட்டன. இருப்பினும், போதிய பொது போக்குவரத்து இல்லாமல், பயணிகள் அவதிப்படுகின்றனர்.
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது புதிய தடம் பயன்பாட்டுக்கு வந்தாலும், மின்சார ரயில்களின் சேவை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. இதனால், நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இது தவிர, காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில், செங்கல்பட்டு-சென்னை கடற்கரை மார்க்கத்தில் விரைவு மின்சார ரயில்கள் குறைவாகவே இயக்கப்படுகின்றன.
அதாவது காலை மற்றும் மாலை நேரங்களில் தலா 4 மின்சார விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, இந்த எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இது மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், “சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் அலுவலக நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், கூட்ட நெரிசலுடன் பயணிக்கும் நிலை உள்ளது.
எனவே, 16 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் இயக்க வேண்டும். 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் போல இயக்கப்படும். மேலும், இந்த ரயில் நடைமேடையில் நின்று செல்லும் வகையில் நடைமேடைகளை அகலப்படுத்த வேண்டும்.
அலுவலக நேரங்களில் இந்த வழித்தடத்தில் குறைந்த எண்ணிக்கையிலான விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இதன் மூலம், பயணிகள் கூட்டம் குறையும்,” என்றார். சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தாம்பரம் – செங்கல்பட்டு 3வது ரயில் பாதை அமைக்கப்பட்ட பின், ரயில் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்ட பிறகு, இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக கூடுதல் ரயில் சேவைகள் செய்யப்படுகிறது.
இது தவிர தினசரி அலுவலக நேரங்களில் கூடுதல் ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடலுார் – செங்கல்பட்டு வழித்தடத்தில், காலை மற்றும் மாலை நேரங்களில், விரைவு மின்சார ரயில்களை அதிகப்படுத்துவது குறித்து, அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.