சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மெட்ரோ ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. போதிய பஸ்கள் இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக, எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் 63 மின்சார ரயில்களின் சேவை வரும் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக கடலுார் மற்றும் பல்லாவரம் இடையே மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால், போதிய ரயில் சேவை இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆக்கிரமிப்பு: சென்னை பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அலைமோதியது. குறிப்பிட்ட நேரம் வரை காத்திருந்து சிறப்பு மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலில் பயணம் செய்தனர். ஏற்கனவே, மின்சார ரயில் பற்றி கேள்விப்பட்டு பெரும்பாலான பொதுமக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் குவிந்துள்ளனர்.
இதனால், மெட்ரோ ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், பஸ் ஸ்டாண்டில் போதிய பஸ்கள் இல்லாததால், பயணிகள் அவதியடைந்தனர். கூடுவாஞ்சேரி, திருமலைநகர், பொத்தேரி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி வழியாக பாரிமுனைக்கு இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணிகள் அவதியடைந்தனர்.
போதிய பஸ்கள் இல்லை – இது குறித்து பயணிகள் சிலர் கூறியதாவது: கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுவாஞ்சேரி, பல்லாவரம், கிண்டி, பாரி முனைகளுக்கு கூடுதல் மாநகர பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், போதிய பஸ்கள் இயக்கப்படாததால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணிகள் அவதியடைந்தனர். வரும் 14ம் தேதி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.