புதுடெல்லி: உளுந்தூர் பேட்டையில் புதிய விமான நிலையம் கட்ட வேண்டும், புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என விழுப்புரம் எம்பி டி.ரவிக்குமார் மக்களவையில் பூஜ்ய நேரத்தில் வலியுறுத்தினார்.
இதுகுறித்து மக்களவையில் இன்று விழுப்புரம் எம்பி டி.ரக்விக்குமார் பேசியதாவது: உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுபாதையை பயன்படுத்தி அங்கு விமான நிலையம் அமைக்க வேண்டும்.இந்த கோரிக்கையை 17வது பார்லிமென்டில் ஏற்கனவே எழுப்பி உள்ளேன்.உதான் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. .
மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இம்முறையாவது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். புதுச்சேரியில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதால் புதுச்சேரி மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும்.
அந்தப் பகுதிகளை நன்கு அறிந்த அமைச்சர் இதனை கட்டாயமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். விமான கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் தெரிவித்தனர். அந்தக் கோரிக்கையை நான் இரண்டாவது முறையாக வைக்கிறேன். அதுமட்டுமின்றி, விமானம் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
ஏனெனில் காலத்தை எதனாலும் திருப்ப முடியாது. காலத்தின் கருணை கருதி, தாமதம் ஏற்பட்டால், இழப்பீடு வழங்க முன் வருமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.