
திருச்சி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு தனி விமானம் வந்தது. திருச்சி விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்குவதற்கான சிக்னல் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்னையால், திருச்சி வான்வெளியில் விமானம் 5 முறைக்கு மேல் வட்டமடித்தது.
இதையடுத்து, இரவு 9.30 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 10.30 மணிக்கு தரையிறங்கியது. இதையடுத்து, கோலாலம்பூருக்கு இரவு 11.30 மணிக்கு புறப்பட விமானம் தயாராக இருந்தது.

அப்போது, விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, 4 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோலாலம்பூருக்கு புறப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.