தஞ்சாவூர்: புதிய ஓய்வுதே திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஊதிய குழு வரம்பிற்குள் பழைய ஊதியர்கள் வர மாட்டார்கள் என்ற முடிவை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.