கம்பம்: கம்பம் அருகே உள்ள சுருளி அருவி புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மீக தலமாகும். இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். பக்தர்கள் அருவியில் நீராடி அங்குள்ள பூதநாராயணன் கோயிலிலும், சுருளிப்பட்டியில் உள்ள வேலப்பர் கோயிலிலும் வழிபடுவது வழக்கம். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி மற்றும் மேகமலை அருகே உள்ள சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதிகளான தூவாணம் அணை, அரிசிப்பாறை, ஈத்தக்காடு போன்ற பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்யவில்லை.
இதனால் சுருளி அருவியில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து தற்போது ஒருவர் நின்று குளிக்கும் அளவிற்கு மட்டுமே தண்ணீர் விழுகிறது. இதனால் சுருளி அருவிக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குறைந்த தண்ணீருக்காக காத்திருந்து குளித்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். கடந்த தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் சுருளி அருவி நீர்பிடிப்பு பகுதிகளில் குளிப்பதை தடுக்கும் அளவுக்கு நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.
வனத்துறையினர் ரூ.10 கட்டணம் வசூலித்து வந்தனர். சுருளி அருவி நுழைவு பகுதியில் இருந்து அருவி பகுதிக்கு செல்ல 10. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சுருளி அருவியில் இயக்கப்பட்ட வேன் பழுதடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் நுழைவாயில் பகுதியில் இருந்து அருவிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே பழுதடைந்த வேனை உடனடியாக சீரமைத்து இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.