பிளஸ்-1 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டு முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தமிழகத்தில் பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.
இந்தத் தேர்வை எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண்கள் மாறிய மாணவர்களின் பட்டியல் ஜூன் 30 ஆம் தேதி மதியம் வெளியிடப்படும். மாணவர்கள் அதன் விவரங்களை தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்கள் மாறிய மாணவர்கள் மட்டுமே மேற்கண்ட தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து தங்கள் திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும், அசல் மதிப்பெண் சான்றிதழ் எந்த தேதியில் வழங்கப்படும் என்ற விவரமும் பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.