சென்னை : தமிழர்களின் மருத்துவ அறிவை களவாட வடக்கத்திய கும்பல் சூழ்ச்சி செய்வதாக கவிஞரும் சித்தமருத்துவருமான குட்டி ரேவதி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழர்களின் மருத்துவ ஏடுகளை களவாட வடக்கத்திய கும்பல் சூழ்ச்சி செய்வதாக கவிஞரும், சித்த மருத்துவருமான குட்டி ரேவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழர்களின் மருத்துவ அறிவுக் களஞ்சியமான சித்த மருத்துவ மூல புத்தகங்கள் பலவற்றை, ஆயுர்வேத மருத்துவ அட்டவணையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் இணைத்துள்ளதை கண்டித்த அவர், இதை ஒன்றுபட்டு பாதுகாப்பது, எதிர்வினையாற்றுவதை நமது கடமையாக கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்.