திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண்கள் விடுதலை இயக்கம் சார்பில் தேர்தல் வெற்றி விழா நேற்று நடந்தது. இதில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி பேசியதாவது:- திமுகவுக்கு அரசியல் கட்சிகள் சவால் விடுகின்றன. திமுகவும், விசிகவும் கொள்கையால் இணைந்த கூட்டணி. இந்த கூட்டணி உறுதியான நிலைப்பாட்டில் நிற்கிறது.
விரக்தியில் அமித் ஷாவையும், நடிகர் விஜய்யையும் விசிக விமர்சித்த எடப்பாடிக்கு எங்களது கொள்கை உறுதிதான் காரணம். விசிகவின் கொள்கை உறுதி அவர்களை தடுமாற வைக்கிறது. இதுவரை தேர்தல் களத்தில் நிற்காத கட்சியை தூண்டி விடுகின்றனர். அடுத்து ஆட்சிக்கு வருவோம் என்று உறுதியளிக்கிறார்கள். தமிழக அரசியலில் இரண்டாம் இடத்துக்கான போட்டி அதிமுக, நடிகர் விஜய், அண்ணாமலை இடையேதான். திமுக முதலிடத்தில் உள்ளது. அதை யாராலும் தோற்கடிக்க முடியாது. வார்டு தேர்தலில் கூட நிற்காத கட்சி சவாலாக உள்ளது.

வி.சி.க. இருக்கும் வரை இந்த கூட்டணியை எந்த கட்சியும் தோற்கடிக்க முடியாது. லஞ்சம் வாங்கிக்கொண்டு திமுக கூட்டணியை உடைக்க சிலர் வேலை செய்கிறார்கள். அதிமுகவை பிளவுபடுத்துவதே பாஜகவின் நோக்கம். பாஜகவுடன் எடப்பாடி போனால் கதை முடிந்துவிட்டது. 100 மோடிகள் பிறந்தாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது. சினிமா செட் போட்டுக்கொண்டு கிராமங்களுக்குச் சென்று கிளிசரின் தடவி அழுபவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் மக்களுடன் களத்தில் இருப்பவர்கள். சனாதன கும்பல் வெவ்வேறு முகமூடிகளுடன் வருகிறது. ஹீரோயின் முகமூடியுடன் இருக்கிறார்கள். எனவே, சனாதனத்தை தோற்கடிப்போம்.