சென்னை: கடந்த ஏப்ரல் 5-ம் தேதி சென்னையில் தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் சார்பில் திமுக மூத்த அமைச்சர் பொன்முடி பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு வருத்தம் தெரிவித்தாலும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று கூடிய சட்டசபை கூட்டத்தில் பொன்முடி பங்கேற்கவில்லை. இதில் திமுக உறுப்பினர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநில சுயாட்சி விதி 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் பொன்முடி மட்டும் வரவில்லை. இருப்பினும், முதலமைச்சரின் இந்த முடிவை அவர் சமூக வலைதளங்களில் வரவேற்றுள்ளார்.