சென்னை: இதுகுறித்து செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளராக இருக்கும் ஏ.வி.எம்.ஷெரீப் பெயர் கொண்ட போஸ்டர் இன்று எனது பிறந்தநாளையொட்டி சென்னை மாநகரில் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தியா கூட்டணியை சீர்குலைக்கும் முயற்சியில் பல்வேறு மத தீய சக்திகள் கருமேகம் போல் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக தமிழகத்தில் நமது ஒற்றுமையை சீர்குலைக்க இந்த மத தீய சக்திகள் பல்வேறு சதிகளை தீட்டி வருவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் – திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், ஒற்றுமையை குலைக்கும் நோக்கில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், அவர்களின் வாசகங்கள் இடம் பெற்றுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். கூட்டணி குறித்து பேச அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே அனைத்து அதிகாரமும் உள்ளது.

உங்களின் இந்த அநாகரீகமான செயல் கட்சியின் கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் சீர்குலைப்பதோடு கீழ்படியாத செயலாகும். நான் ஏற்கனவே அறிவித்தபடி, நமது மூத்த தலைவரும், இலக்கியவாதியுமான குமரி அனந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது. என் பிறந்தநாளை யாரும் கொண்டாடக் கூடாது என்று என்னைச் சந்தித்தவர்களிடம் ஏற்கனவே தெளிவாகச் சொல்லிவிட்டேன்.
எனது பிறந்தநாளை முன்னிட்டு உங்கள் சுவரொட்டி விளம்பரம் வன்மையாகக் கண்டிக்கப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும். 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக வந்து உங்கள் நடவடிக்கையை விளக்க வேண்டும். நீங்கள் அளிக்கும் விளக்கம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் விவாதித்த பிறகு, உங்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.