சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் இருப்பதால், அவரது அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

எனவே, அவர் கலந்து கொள்ளவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உதயநிதியின் உடல்நிலை சீரடைந்து விரைவில் குணமடைவார் என்று அரசியல் தலைவர்கள், அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் முழுமையாக குணமடைந்த பிறகு, ஒத்திவைக்கப்பட்ட அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளுக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும் என்று கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.