சென்னை: ”அரசு சமீபத்தில் அறிவித்த சிறு நீர்மின் நிலைய கொள்கையில், தமிழகத்தின் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் காவிரி, வைகை ஆற்றுப்படுகைகளில் சிறு புனல் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள சிறிய ஆறுகளான கூவம் மற்றும் அடையாறில் நுண் சுரங்கப்பாதை மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது.
மழைக் காலங்களில் இந்த ஆறுகளில் ஓடும் நீரில் 100 KV முதல் 10 MW வரை மின்சாரம் தயாரிக்கும் வகையில் இந்த மின் நிலையங்கள் அமைக்கப்படும். 2030-ம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் பசுமை எரிசக்தியை உற்பத்தி செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த இலக்கை அடைய இந்த மைக்ரோ-டன்னல் மின் உற்பத்தி நிலையங்கள் உதவிகரமாக இருக்கும். தற்போது தமிழகம் முழுவதும் 47 நீர்மின் நிலையங்கள் உள்ளன. இதில், 2,321 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது,” என்றனர்.