சென்னை: சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் பிரபல தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பள்ளி வளாகத்தில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பள்ளி கட்டிடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.
இதனை கண்டித்து இன்று (அக்டோபர் 07) காலை பள்ளி முன்பு திரண்டு மாணவர்களின் பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரவலான சூழல் ஏற்பட்டது.
பள்ளி நிர்வாகத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.