சென்னை: சென்னை குற்றப்பிரிவு கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில், செப்.10-ம் தேதி மாலை 4 மணிக்கு சிபிசிஐடி வளாகத்தில் பழுது நீக்க முடியாத பழைய வாகனங்களின் உதிரி பாகங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏலம் எடுக்க விரும்புவோர் செப்டம்பர் 10-ம் தேதி மாலை 4 மணிக்குள் ஏலத்தில் பங்கேற்கலாம். ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக ஏலத்தொகையை பணமாக செலுத்தி இரண்டு நாட்களுக்குள், செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி தொகையை அவர்களது ஜிஎஸ்டி கணக்கில் செலுத்தி, அதன் நகலையும் இந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பிறகு வாகனத்தின் பழைய உதிரி பாகங்களுக்கு விற்பனை ஆணை வழங்கப்படும். ஏலதாரர்கள் தங்கள் ஆதார் அட்டை நகலை ஏலத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 9952022860/9962488150 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.