சென்னை: மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு 400 நாட்டிய கலைஞர்கள் பங்குபெறும் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினர்.
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040 வது சதய விழா இரண்டு நாட்கள் அரசு விழாவாக தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் நாள் தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெறும் மாமன்னர் ராஜ ரஜ சோழன் வேடமடைந்து மன்னர் வருவது போல ராஜராஜ சோழன் வேடமடைந்து சாரட்டு வண்டியில் அமர்ந்து வர பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உடன் கூடிய நகர்புற வீதி உலா நடந்தது.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து தஞ்சை பெரிய கோவில் வரை நடைபெற்றது. பின்பு பெரிய கோவில் வந்த மன்னரை போற்றும் வகையிலும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் 400 நாட்டிய கலைஞர்கள் பங்கு பெற்ற புஷ்பாஞ்சலி நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் பங்கு பெற்று நாட்டிய நிகழ்ச்சியை நாட்டியம் ஆடினர். ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.