மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி தனியார் சொகுசு விடுதியில் தமிழக வெற்றிக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், தேர்தல் நிர்வாகக் குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விடுதியில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இந்த இடத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்தினால், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் சிரமமின்றி வர முடியுமா?
தங்கள் வாகனங்களை எங்கு நிறுத்துவது போன்றவற்றை ஆலோசித்தனர். இந்த ஆய்வின் போது, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை, எந்த மேடையில் கூட்டம் நடத்தலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.