தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் மகாமகம் விழாவிற்குள் முடிக்கப்படும் என்று ஆய்வு பணியின் போது ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நாட்டின் முக்கிய ரெயில் நிலையங்கள் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. அதே போல் கும்பகோணம் ரெயில் நிலையத்தையும் மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2024-ம் ஆண்டு பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக அடிக்கல் நாட்டினார். இந்த பணிகள் நடைமேடைகள் சீரமைப்பு, அகலப்படுத்துதல், விரிவாக்கம் செய்தல், ரெயல் நிலைய கட்டுமான பணிகள் என 2 கட்டங்களாக நடக்கிறது.
ரெயில் நிலையத்தின் நடைமேடைகள் அகலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை கடந்த மாதம் நடந்தது. தொடர்ந்து பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணியில் ரெயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைப்பதோடு, 26 பெட்டிகள் வரை நிற்கும் வகையில் நடைமேடைகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது. ரெயில் நிலைய கட்டுமான பணியில் சோழர்கால சிற்ப அமைப்புகள், கோவில கோபுரத்துடன் கூடிய முகப்பு பகுதி, அனைத்து பகுதிகளுக்கு நடைமேம்பாலம், லிப்ட், நகரும் படிகட்டுகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த பணிகள் குறித்து ரெயில்வே துறை அமைச்சர் ஏற்கனவே காணொலி காட்சி வழியாக மதிப்பாய்வு செய்துள்ளார். தென்னக ரெயில்வே பொதுமேலாளர் 2 முறையும், திருச்சி கோட்ட அதிகாரிகள் என தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி , கூடுதல் கோட்ட மேலாளர் சத்யரதன் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் ரெயில் நிலைய சீரமைப்பு பணிகள் தொடங்குவது குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது தற்போது உள்ள ரெயில் குட்ஷெட் பகுதி, ரெயில் நிலையத்திற்கு வாகனங்கள் வந்து செல்வதற்காகவும், வாகனம் நிறுத்துமிடத்திற்கான இடங்களையும், ரெயில் நிலையத்தில் உட்புற பகுதி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து அனைத்து வாகனங்களும் வந்து செல்லும் வகையில் சாலை வசதி குறித்து மகாமகம் குளம் வரை சென்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கும்பகோணம் ரெயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் அமைக்கப்படஉள்ளன. தற்போது உள்ள குட்ஷேட் திருநாகேஸ்வரம் ரெயில் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது. ரெயில் நிலையத்தில் முன்புறம், பின்புறம் என 2 இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தும் இடம், 2 பக்கமும் பஸ்கள் வந்து செல்ல சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. முதற்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 2-ம் கட்ட பணிக்காக டெண்டர் விரைவில் விடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்படும்.
அதே போல் இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு மகாமகம் விழாவிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர். ஆய்வின் போது திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத், ரெயில் கட்டுமான பொறியாளர்கள், போக்குவரத்து துறை அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பல்வேறு ரெயில்வே பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கும்பகோணம் ரெயில் நிலையத்தில் பணிகள் நடக்கிறது. ரெயில்நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் அமைக்கப்படஉள்ளன. தற்போது உள்ள குட்ஷேட் திருநாகேஸ்வரம் ரெயில் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் ரெயில் நிலையத்தில் முன்புறம், பின்புறம் என 2 இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தும் இடம், 2 பக்கமும் பஸ்கள் வந்து செல்ல சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 2-ம் கட்ட பணிக்காக டெண்டர் விரைவில் விடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்படும். அதே போல் இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு மகாமகம் விழாவிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.
இந்த ஆய்வின் போது திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத், ரெயில் கட்டுமான பொறியாளர்கள், போக்குவரத்து துறை அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பல்வேறு ரெயில்வே பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.