சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தை நோக்கி வீசும் மேற்குக் காற்றில் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும், 13ம் தேதி ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழையின்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, தேவாலா, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ., வால்பாறை, சின்கோனா, சோலையார், சிறுவாணி அடிவாரம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. , கோவை மாவட்டத்தில் உபாசி தேயிலை ஆராய்ச்சி. நீலகிரி மாவட்டம் மேல் பவானி நிலையம், தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் 11ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.