அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மிதமானது முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.