வரும் 17-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தை நோக்கி வீசும் கிழக்குக் காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 20-ம் தேதி வறண்ட வானிலையே நிலவும்.
தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை சில இடங்களில் இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும். வட தமிழகத்தில் இன்று சில இடங்களிலும், தமிழகத்தில் 16, 17-ம் தேதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பே இல்லை. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.