இதுகுறித்து, மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாட்டின் தென்பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு காற்று சந்திக்கும் இடங்களில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக மார்ச் 22 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 35.6-37.4 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93.2-95 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 78.8 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கும்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் சாம்ராஜ் எஸ்டேட்டில் 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.