சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவைத் தாக்க வாய்ப்புள்ளது.
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.