சென்னை: கடந்த செப்., 2015-ல் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேருக்கு தலா 40 லட்சம் ரூபாய் அபராதமும், மீனவர் ஒருவருக்கு 18 மாத சிறை தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் நோக்கில் இலங்கை அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. முன்னதாக தமிழக மீனவர்களுக்கு 6 மாதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதித்த இலங்கை நீதிமன்றங்கள், தற்போது குறைந்தபட்ச சிறைத்தண்டனையை ஒன்றரை ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.
இது தவிர கோடிக்கணக்கில் அபராதமும் விதிக்கப்படுகிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த முயற்சி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.