சென்னை: ஒருங்கிணைப்புப் பணி காரணமாக மாதத்தின் கடைசி வேலை நாளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படாது. இம்மாதத்தின் கடைசி வேலை நாளான 29-ம் தேதி சனிக்கிழமை வருகிறது. தெலுங்கு புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அடுத்த 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.

எனவே, இம்மாதம் கடைசி 2 நாட்கள் நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், 29-ம் தேதி அனைத்து நியாயவிலைக் கடைகளும் இயங்கி, ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறும் வகையில், வழக்கம்போல் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.