சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 16 மற்றும் 17-ம் தேதிகளில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று தமிழகத்தின் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
சென்னை உள்பட 12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும்.
சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மிக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 16-ம் தேதி 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் அக்டோபர் 16-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 17-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.