சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் துவங்கி 28-ம் தேதி வரை நடந்தது. இதற்கான விடைத்தாள்களை திருத்த தமிழகத்தில் 80 மையங்கள் அமைக்கப்பட்டு 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்துகின்றனர். இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச், 28-ல் துவங்கி, ஏப்., 15-ல் முடிவடைந்தது. இதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி, தற்போது துவங்கியுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தாங்கள் எழுதிய விடைகளுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர். அவ்வாறான நிலை இவ்வருடம் ஏற்படக்கூடாது என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்காக, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், விடைத்தாளில் மாணவர்கள் எழுதியுள்ள ஒவ்வொரு விடையையும் கவனமாகப் படித்து, அதன் பின்னரே உரிய மதிப்பெண்களை வழங்க வேண்டும். அவர்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மதிப்பெண்கள் கொடுக்கக்கூடாது. மேலும், மதிப்பெண்களைக் கூட்டும்போதும், மொத்த மதிப்பெண்களைக் குறிப்பிடும்போதும், கூட்டல் கவனமாகச் செய்ய வேண்டும்.
முதல் பக்கத்தில் கேள்வி வாரியாக மற்றும் பக்கவாட்டு மதிப்பெண்களை எடுக்கும்போது, மொத்த மதிப்பெண்களையும் கவனமாக எழுத வேண்டும். ஆசிரியர்கள் தவறு செய்யாத வகையில் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.