புதுடெல்லி: அரிசி உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அரிசி ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் தளர்த்தியது. இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 1 பில்லியன் டாலர்களை (ரூ.8,400 கோடி) தாண்டியுள்ளது.
இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 85.79% அதிகமாகும். அரிசி ஏற்றுமதி தொடர்பான புள்ளி விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி நடப்பு அக்டோபர் மாதத்தில் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபரில் ¥565 மில்லியன் (ரூ. 4,750 கோடி) ஆக இருந்தது.