கோவை: இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- எனது மகள் ரிதன்யாவின் தற்கொலை வழக்கை சரியான பிரிவில் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று நான் மனு தாக்கல் செய்துள்ளேன்.
வழக்கை தீவிரமாக விசாரித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருவதால், விசாரணை அதிகாரி மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, தனி விசாரணை அதிகாரியை நியமித்து வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன். ரிதன்யாவுக்கு நாங்கள் கொடுத்த நகைகள் இன்னும் எங்களுக்கு வழங்கப்படவில்லை.

ஆதாரங்களை சேகரித்த பிறகு நீதிமன்றம் மூலம் எங்களுக்கு தருவதாக அவர்கள் கூறியுள்ளனர். ரிதன்யாவின் தற்கொலை சம்பவம் இந்தியாவில் எங்கும் நடக்கக்கூடாது. 27 வயது பெண்ணை சமூக ஊடகங்களில் தவறாக சித்தரிப்பதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது.
அது உங்கள் குடும்பம், உங்கள் சகோதரி என்றால், இதை நீங்கள் சமூக ஊடகங்களில் பதிவிடுவீர்களா? சரியான தகவலை பதிவிடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.