விழுப்புரம் : காதல் கணவர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதை விரும்பாத புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
காதல் கணவர் வெளிநாடு செல்வது பிடிக்காமல் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட அவலம் அரங்கேறியுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த முத்தரசி, லட்சுமணன் என்பவரை 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார்.
லட்சுமணனுக்கு குவைத்தில் வேலை கிடைத்துள்ளது. இதற்கு முத்தரசி எதிர்ப்பு தெரிவித்தும் லட்சுமணன் விசா ஏற்பாட்டுக்கு மும்பை சென்றதால், அவர் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.