நெல்லை: பிரபல நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமண வாழ்க்கை மற்றும் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இது தொடர்பாக அவரது மருத்துவர் டேனியல்ராஜ் நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார், யூடியூப் மற்றும் பிற சமூக வலைதள நிறுவனங்களை தொடர்பு கொண்டு, தவறான வீடியோக்களை நீக்குமாறு கூறினர்.

இந்நிலையில், அந்த சமூக ஊடக தளங்களில் தனுஷ் தொடர்பான வீடியோக்களை அதன் பயனர்கள் தானாக முன்வந்து நீக்கியுள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘வதந்தி வீடியோக்களை முழுமையாக நீக்குவது என்பது நீண்ட செயலாகும். அது நடந்து கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம்’ என்றார்.