தூத்துக்குடி: கொலு பொம்மைகள் விற்பனை… தூத்துக்குடியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை
நவராத்திரி திருவிழா வருகிற 3ம் தேதி துவங்கி 12 ஆம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில், தூத்துக்குடியில் கொலு பொம்மைகளின் விற்பனை களைகட்டியுள்ளது.
முருகப்பெருமான், தசாவதார பொம்மைகள், வெங்கடாஜலபதி , மாயாபஜார், பரமசிவன் – பார்வதி , ஆண்டாள் – அஷ்டலட்சுமிகள், காஞ்சி பெரியவர், விவேகானந்தர் என பல்வேறு வகைகளிலும் வடிவங்களிலும் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
பொதுமக்களும் கொலு பொம்மைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனால் வியாபாரம் மும்முரம் அடைந்துள்ளது.