சென்னை: கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுக்கான கால அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் 10 அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கலை மற்றும் அறிவியல் சார்ந்த கல்லூரிகளில் பல்வேறு தேதிகளில் நடத்தப்படுகின்றன. இதனால், பல்கலைக் கழகத்தில் தேர்வெழுதும் மாணவர், அங்குள்ள படிப்பில் எளிதாகச் சேரலாம்.
வேறு பல்கலைக் கழகத்தில் தேர்வு தாமதம் ஆவதால், மாணவர் வேறு பல்கலைக் கழகத்தில் உயர்கல்வியில் சேர்வதில் தாமதம் ஏற்பட்டு, அனுமதி கிடைக்காமல் போகும். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனித்தனி தேர்வு அட்டவணையைப் பின்பற்றுவதால் சில நேரங்களில் பல்கலைக்கழகமும் கல்லூரியும் மற்ற நிகழ்ச்சிகளை கூட்டாக நடத்த முடியாது.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளை மாநிலம் முழுவதும் ஒரே தேதி மற்றும் நேர அட்டவணையில் நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 10 அரசு கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களில் தேர்வு மற்றும் பாட வகுப்புகள் தொடர்பான உத்தேச அட்டவணையை கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகளை தொடங்கியுள்ள கல்லூரிகள் நவம்பர் 4ம் தேதி செமஸ்டர் தேர்வுகளை தொடங்கி நவம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.தேர்வு முடிவுகளை டிச.21க்குள் வெளியிட வேண்டும்.
அடுத்த செமஸ்டர் வகுப்புகள் டிச., 4ல் துவங்கி, ஏப்., 11ல் முடிவடையும். ஆண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு, ஏப்., 15ல் துவங்கி, மே, 10க்குள் முடிக்க வேண்டும்.மே 31ம் தேதிக்குள், தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என, அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.