சென்னை: மணல் லாரி உரிமையாளர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு காரணமாக 400 கோடி ரூபாய். இதுகுறித்து, தெற்கு லாரி உரிமையாளர்கள் நலச் சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகள் கடந்த 12 மாதங்களாக இயங்கவில்லை. மணல் தட்டுப்பாடு காரணமாக எம்-சாண்ட், ப்ளூ மெட்டல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு கட்டுமான தொழிலை பாதித்துள்ளது. மேலும் கட்டுமான நிறுவனங்களுக்கும், மணல் லாரி உரிமையாளர்களுக்கும் ரூ.400 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், அண்டை மாநிலங்களில் உள்ள லாரி உரிமையாளர்களுக்கு நேரடியாக மணல் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட ஆன்லைன் மணல் விற்பனை தோல்வியடைந்ததால் குவாரிகளில் இருந்து மணல் லாரிகளுக்கு நேரடியாக மணல் வழங்க வேண்டும்.
தற்போது தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் அனைத்து ஆறுகளிலும் மணல் குவிந்துள்ளது. புதிய மணல் குவாரிகளை போர்க்கால அடிப்படையில் இயக்கவும், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் மணல் லாரி உரிமையாளர்களை பாதுகாக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.