தஞ்சாவூர்: தஞ்சாவூரில், இந்திய மாணவர் சங்கத்தின் 55 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு, மன்னர் சரபோஜி கல்லூரி கிளை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
கல்லூரி முதல்வர் சுமதி துவக்கி வைத்தார். பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள் கலந்து கொண்டு, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இதில் கிளைத் தலைவர் ரஞ்சித், கிளை செயலாளர் பிரேம் குமார், கிளை நிர்வாகிகள் சுமித்ரா, ஷாலினி, நித்யசூரியா, நவசூர்யா, ஹரி, விக்கி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.