நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மையில் சென்னை எழும்பூரில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்கள் அவரை சந்தித்து, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா? என்ற கேள்வியை எழுப்பினர். இதற்கு பதிலளித்த சீமான், “நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும். பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி என்னை ஏன் பிடித்து தள்ளுகிறீர்கள்?” எனத் தெரிவித்தார்.

மேலும், “எனக்கு சொந்தமாக மூளை உள்ளது. சிந்திக்கும் ஆற்றல் உள்ளது. நான் என்ன நினைக்கிறேனோ அதைதான் செய்வேன். திரும்ப திரும்ப கேள்வி எழுப்பதை நான் வெறுக்கிறேன்,” எனவும் அவர் கூறினார். அண்மையில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டதைப் பற்றி அவர் கூறுகையில், “புதிய தலைவராக பதவியேற்ற நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து சொல்லலாம்,” எனவும் தெரிவித்தார்.