சென்னை: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை (TVK Vijay) கடுமையாக விமர்சித்து பேசினார். அவர், விஜய்யின் கட்சிக்கு தெளிவான கொள்கை இல்லாமல், ரசிகர் ஆர்வத்தையே முன்னிலைப்படுத்துகிறது என்றும், கொள்கை பற்றி கேட்டால் “தளபதி… தளபதி” என கத்துவதாகவும் விமர்சித்தார்.

சீமான், அணில் குஞ்சுகளை எடுத்துக்காட்டாக கூறி, புலி வேட்டைக்கு செல்லும் போது குறுக்குமறுக்காக அணில்கள் ஓடுவது போன்றது போல, தளபதி ரசிகர்களின் செயல்பாடும் முறையான நோக்கமின்றி நிகழ்கிறது என எடுத்துக்காட்டினார்.
பொதுக்கூட்டத்தில், சீமான் செஞ்சி கோட்டை குறித்து வரலாற்று திரிபை கண்டித்து, அதை தமிழ் மன்னர் கோனேரிக்கோன் கட்டியதாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதில், யுனஸ்கோ அறிவிப்பில் செஞ்சி கோட்டை மராட்டியர்களால் கட்டப்பட்டது என குறிப்பிடப்பட்டதை சீமான் கண்டித்தார்.
சீமான் ஆவேசமாக மேடையில் இருந்து கீழே இறங்கி, கீழேயிருந்த செய்தியாளர்கள் மற்றும் பவுன்சர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாவலர்கள் நிகழ்வை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவியுள்ளது.
சீமான் கூறியதாவது: “என்னடா உங்க கொள்கை? அப்படின்னு கேட்டால், டிவிகே… டிவிகே… என்று கத்துகிறார்கள். அணிலே, ஓரமா போய் விளையாடு. குறுக்கு மறுக்குமாக ஓடாதே. ஒரு மான், ஒரு காட்டெருமை, காட்டாடை அடித்து சாப்பிட்டால் புலிக்கு பெருமை; ஒரு அணிலை அடித்து சாப்பிட்டால் என்ன பெருமை?”