திருச்சி: திருச்சி சரக டிஐஜி வருண்குமார், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண்.4-ல் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக சீமான் 8-ம் தேதி காலை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அவரது முன்னிலையை பதிவு செய்த நீதிபதி விஜயா, வழக்கு விசாரணையை இன்று உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. இதில் டிஐஜி வருண்குமார் ஆஜரானார். டிஐஜியின் ஆவணங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய சீமான் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கின் விசாரணையை மே 8-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி விஜயா, அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.